கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் கதா நாயகனாக நடிக்கும் படம் ‘சென்னையில் ஒரு நாள் -2’.
சரத்குமார் நடித்த வெற்றிப்படமான சென்னையில் ஒரு நாள் படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் படக்குழுவினர் இப்படத்திற்கு சென்னையில் ஒரு நாள் -2 என்று பெயரிட்டுள்ளனர். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் கோவையில் தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில்.

நெப்போலியன்

நடிகர் நெப்போலியனும் மற்றும் நடிகை சுஹாசினியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கலக்கலான காமெடியுடன் மாபெரும் வெற்றி பெற்ற தென்காசிபட்டினம் படத்திற்கு பிறகு நடிகர் நெப்போலியன் இப்படத்தின் மூலம் மீண்டும் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் மூத்த நடிகர்களான சரத்குமாரும், நடிகை சுஹாசினியும் முதன்முறையாக இப்படத்தில் தான் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராம் மோகன்  தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார்.
ஒளிப்பதிவு        –        தீபக்
இசை        –        ராண்
கலை        –        சோலை அன்பு

நெப்போலியன்

மேலும் இப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் நடிக்கின்றனர். நிசப்தம் படத்தில் நடித்த  குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]