நுவரெலியா ஹாவாஎலிய ஶ்ரீ முத்தமாரியம்மன் ஆலய திருவிழாவில் கலந்து சிறப்பித்த மஹிந்த

எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இன்று (19) காலை நுவரெலியா ஹாவாஎலிய ஶ்ரீ முத்தமாரியம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை அங்கு சென்ற மகிந்த ராஜபக்‌ஷ அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளதுடன்
இவருடன் அவரின் பாரியார் சிராந்தி ராஜபக்‌ஷ , விசேட அபிவிருத்தி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோரும் மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் கலந்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]