நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு – இன்றைய அமைச்சரவை சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பிரேரணை தொடர்பில் இன்றைய அமைச்சரவை சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்துறை அமைச்சரினால் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து ஆராய்வதற்கு ஒருவார கால அவகாசம் கோரப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் அந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]