நுவரெலியா கொள்ளை; ஆட்டோ மீட்பு

நுவரெலியா

‘நுவரெலியா’வில் சிகரட் விற்பனை செய்யும் முகவர்கள் கொண்டுச்சென்ற பணத்தை கொள்ளையிட பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு கோடி 45 இலட்சம் ரூபாய் பணம் நேற்று முன்தினம் காலை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

நுவரெலியா – கலாபுர – கெலேபெத்த பகுதியில் வைத்து இந்த ஆட்டோ கைப்பற்றப்பட்டதாக நுவரெலிய பொலிஸ்நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆட்டோவின் உரிமையாளர் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்தவர். என்றும் கொள்ளையர்கள் ஆட்டோவை கடத்திச் சென்று இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]