நுவரெலியாவில் கடும் குளிர் 4 டிகிரி செல்சியஸை எட்டியது வெப்பநிலை

நுவரெலியா மற்றும் அண்டிய பகுதிகளில் கடும் குளிரான காலநிலை நிலவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியாவில் பனித்துளிகள் விழுவதனால் அதிக குளிருடனான காலநிலை நிலவுவதாக திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் தரை பனியில் உறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் என்றுமில்லாதவாறு கடும் குளிரான காலநிலை நிலவுதாக பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான மாறுபட்ட காலநிலை அடுத்து வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]