நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தலினால் இளம் பெண் ஒருவர் அலரி விதை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி, பலவெளிக்கிராமத்தில் குறித்த பெண் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் பலவெளிக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான நாகராசா – பிரசாந்தினி (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மூன்றுக்கும் மேற்பட்ட நுண்கடனை எடுத்துள்ளார். நுண்கடனை மீள செலுத்த முடியாமலும், நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் விரக்தியடைந்து, மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்தே அவர் அலரி விதைகளை உட்கொண்ட நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]