நுண்கடன் திட்டத்தினை கட்டுப்படுத்துமாறு ஆர்ப்பாட்டம்!!

நுண்கடன் திட்டத்தினை கட்டுப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் சனிக்கிழமை (12) ஆர்பாட்டப் பேரணி நடைபெற்றது.

வுந்தாறுமூலை பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்ட பேரணியானது அம்பலத்தடி நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி சந்தை வரை பேரணியாக சென்று மீண்டும் நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் முடிவடைந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் ஓரத்தில் நின்று தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களையெழுப்பினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நுண்கடனை திப்பிச் செலுத்த முடியாமை காரணமாக 17 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதனைத் தவிர குடும்பகளில் விரிசல், சமுக சீர்கேடுகள் அத்தோடு நுண்கடன் பெற்ற பலர் மன உளைச்சாலுக்கு உள்ளான சம்பவங்களும் பல காணப்படுகின்றன.

நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்கும் போது உரிய செயற்றிட்டத்தை ஆராய்ந்த பின்னரே கடன்களை வழங்க வேண்டும்.

கடன் சிபார்சுக்காக கிராம சேவக உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் அனுமதி கையொப்பத்தை உறுதிப்படுத்திய பின்னர் வழங்க நடவடிக்கை எடுத்தல், கடன் அறவிடுவோர் எந்தக் காரணம் கொண்டும் கிராமங்களுக்கோ, வீடுகளுக்கோ நேரடியாக வந்து கடன் பணத்தை அறவிடுவதை விடுத்து நுண்கடன் வழங்கும் நிலையங்களில் அறவிடல், ஆய்ந்தறிந்து ஒரு நபருக்கு ஒரு நுண்கடன் நிறுவனமே கடன் வழங்க வேண்டுமே தவிர பல நுண்கடன் நிறுவனங்கள் ஒரு நபருக்கு கடன் வழங்கக் கூடாது போன்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]