நீர் வெறுப்பு நோய் காரணமாக மாணவன் பலி

நீர் வெறுப்பு நோய்

வடமராட்சி பகுதியில் நீர் வெறுப்பு நோய் காரணமாக, பாடசாலை மாணவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் வீட்டிற்குள் நுழைந்த நாய் ஒன்று, சிறுவன், அவனது தாய் மற்றும் சகோதரியை கடித்துள்ளதையடுத்து, இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளதுடன், மாணவனின் தாய் மற்றும் சகோதரி வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாயை கண்டுபிடிக்க, அப்பகுதி மக்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கட்டாக்கலியாக திரியும் அனைத்து நாய்களையும் பிடிபதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]