கொழும்பில் இன்று18 மணி நேர நீர் விநியோக தடை

கொழும்பில் இன்று காலை 9.00 மணி முதல்; சில பகுதிகளில், 18 மணி நேர நீர் விநியோக தடை இடம்பெறுமென நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.நீர் விநியோக தடை

இன்று(04) காலை 9.00 மணி முதல், 5 ஆம் திகதி அதிகாலை 3.00 வரை நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும்.

களனி பாலம் தொடக்கம் தெமட்டகொட வரையான பகுதி மற்றும் அதனுடன் தொடர்புற்ற உள்ளக குழாய் நீர் வியோகப்புபகுதி , பலாமரச் சந்தி, கிராண்ட்பாஸ், மஹவத்த மற்றும் தொட்டலங்க உள்ளிட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என்று சபை தெரிவித்துள்ளது.
ஒருகொடவத்த பிரதான நீர் வியோகப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த பணியின் காரணமாக இந்த நீர் விநியோகத்தடை இடம்பெறுவதாக சபை அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]