கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்றைய தினம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

இன்று நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என அந்த சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]