நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று நீர் நிரம்பிய குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சத்தியசீலன் ஜெயந்தன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழாய் கிணற்றில் பொருத்தப்பட்ட இயந்திரத்தை தாழ் இறக்கி பயன்படுத்துவதற்காக வெட்டப்பட்ட குழியிலேயே குறித்த குழந்தை விழுந்துள்ளது.

குழந்தையின் தாயார் முற்றத்தை சுத்தம் கொண்டிருந்துள்ள நிலையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தெரிவித்து அயலவர்களின் உதவியுடன் தேடிய போது குழந்தை குறித்த குழியில் விழுந்து கிடப்பதை அவதானித்து மீட்டுள்ளனர்.

குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]