நீர் தேக்கத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

ஆணின் சடலம்

தலவாக்கலை மேல்கொத்மலை நீர் தேக்த்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சடலம் இன்று மாலை 03 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் மேலும் கூறினர்.

தலவாகலை மவுன்ட்வோனன் தோட்டத்தைச் சேர்ந்த 40வயதுடைய அருண்குமார் என்பவருடைய சடலமே இவ்வாறு இனங்கான பட்டுள்ளதாகவும் குறித்த நபர் மேல் கொத்தமலை நீர்தேக்கத்தில் மீண் பிடிப்பதற்காக சென்றிருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் நீதவானின் மரண விசாரணைகளையடுத்து, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]