‘நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி’களைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில்

நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி

‘நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி’களைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களான விவசாயிகளை நீதிவான் பிணையில் விடுவித்ததோடு வழக்கை எதிர்வரும் ஒக்ரோபெர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

தற்போதைய காலநிலை காரணமாக மட்டக்களப்பு உன்னிச்சைக்குளம் நிரம்பி வழியும்போது வான் கதவுகள் திறந்ததால் தாம் பாதிக்கப்பட்டதாகக் கூறி நீர்ப்பாசன அதிகாரிகளைத் தாக்கியதான முறைப்பாட்டின் அடிப்படையில் உன்னிச்சைப் பிரதேச விவசாயிகள் இருவர் ஞாயிற்றுக்கிழமை 27.05.2018 மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது விவசாயிகளை தலா இரு சரீரப் பிணைகளில் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.

சமீப சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள மழை சார்ந்த காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் கடந்த 24ஆம் திகதி திறந்து விடப்பட்டன.

இதனால் சடுதியாக உன்னிச்சைக் குளத்தின் நீரேந்துப் பகுதிக்குக் கீழிருந்த விவசாய நிலங்கள், வயல்வாடிகள், வாடிகளிலிருந்த உடமைகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் தாம் பாதிக்கப்பட்டதாக பிரதேச விவசாயிகள் அதிகாரிகளுடன் வார்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அந்த விவசாயிகள் தம்மைத் தாக்கியதாகவும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் பொலிஸில் முறைப்பாடு செய்திரந்தனர்.

திடீரென வான் கதவுகளை முழுமையாகத் திறந்து விடாது கட்டம் கட்டமாகத் திறநது விடப்பட்;டிருந்தால் தாம் அடித்துச் செல்லும் மடை திறந்த நீரால் பாதிப்பை சந்திந்திருக்க முடியாது என்று விவசாயிகள் வாதிடுகின்றனர்.

அதிகாரிகள் அசமந்தமாக இருந்ததாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]