முகப்பு News Local News நீர்கொழும்பில் கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜை கைது

நீர்கொழும்பில் கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜை கைது

நீர்கொழும்பில் கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜை கைது

நீர்கொழும்பில் சட்ட விரோதமான முறையில் உலர்ந்த கடலட்டைகள் மற்றும் உலர்ந்த கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இதன்படி நீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, அனுமதிப்பத்திரங்கள் எதுவும் இல்லாத நிலையில், உலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன நபரிடம் 15.5 கிலோகிராம் உலர்ந்த கடற்குதிரைகள் மற்றும் 33 கிலோகிராம் உலர்ந்த கடலட்டைகள் கைபற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com