நீரோடையில் கார் கவிழ்ந்து ஒருவரை காணவில்லை

கார்

பதுளை, மஹியங்கனை பிரதான வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த கார், இன்று காலை மாபாகடவெவ, 17 ஆம் கட்டைக்கு அருகில் வியானா நீரோடையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, காரில் பயணம் செய்த நால்வரில் மூவர் காப்பாற்றப்பட்டிருப்பதுடன், ஒருவரை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியை, ஆசிரியர்கள் இருவர் மற்றும் வங்கி அதிகாரியொருவர் ஆகியோர் பண்டாரவளையிலிருந்து மஹியங்கனை நோக்கி குறித்த காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகளும், மஹியங்கனை பொலிஸ் அதிகாரிகளும் காணமல் போன நபரை தேடும் பணிகளை நேற்று முன்னெடுத்தனர்.

விபத்தில் சிறு காயமடைந்த ஆசிரியை மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]