நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு

நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட இவ்வருடம் இலங்கையில்இரு மடங்காக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவேண்டியது மிக மிக அவசியம். சீனி மற்றும் இனிப்புப் பதார்த்தங்களை முற்றாகத தவிர்க்கவேண்டுமெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் கிட்டத்தட்ட 25 வீதமானோர் நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் அதற்கான மருந்துகளை கிரமமாக உட்கொள்வதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் எனவும், இதற்கான இலவச மருத்துவ முகாம்கள் (கிளினிக்) நாடெங்குமுள்ள அரச மருத்துவமனைகளில் இலவசமாக நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]