நீரில் மூழ்கி யுவதி உயிரிழப்பு

களனி கங்கையில் நீராடச் சென்ற யுவதி கினிகத்தேன யட்டிபேரிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கண்டியை சேர்ந்த குறித்த யுவதி தமது குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா மேற்கொண்ட நிலையில் இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், 24 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போது, யுவதி நீராடிய இடத்துக்கு சற்று அருகில் சேற்றில் அமிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யுவதி நீராடிய இடம் அபாயகரமானது என்ற அறிவித்தல் பலகை அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]