நீரில் மூழ்கி மாணவன் பலி- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு – செங்கலடி பதுளை வீதியில் காயன்குடா குளத்தில மூழ்கி பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

சேவ்வாய்கிழமை (12) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஜெயராசா ஜனார்தனன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தில் தனது சகோதரி சகிதம் குளத்தில் நீராடச் சென்றுள்ளார். குளத்தின் ஆழத்திற்கு நீடாடச் சென்றவேளை மூழ்கியுள்ளார் அவருடன் நீராடிய சகோதரி மூழ்குவதை அவதானித்து அழுதபோது அயலவர்கள் வந்து குறித்த மாணவனை மீட்ட போதும் அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காயன்குடா பகுதியில் நீர் தட்டுப்பாடு காரணமாக அப்பிரதேசத்தில் வாழும் சுமார் 250 குடும்பங்கள் குடிநீரின்றி பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றன.

குடிநீருக்காக இரண்டு குழாய் கிணறுகள் மாத்திரமே அங்கு அமைக்கப்பட்டுள்ள. குழிப்பதற்காக குளத்தினையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கத

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]