நீரில் மூழ்கிய வெளிநாட்டவர் பலி

ஹிக்கடுவை பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கடல் அலையால் அடித்துச்செல்லப்பட்ட குறித்த நபர், ஆபத்தான நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஹிக்கடுவை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]