நீரின்றி ‘நுவரெலியா‘வில் மரக்கறி செய்கை பாதிப்பு

மலையகத்தில் வெயில் காலநிலை நீடிப்பதனால் மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் மரக்கறி உற்பத்தி பாதிப்படைந்துள்ளதுடன் மக்கறிகளுக்கான நீர் பாய்ச்சுவதில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நீர் நிலைகளில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்டுவதனால் நீர் நிலைகள் வற்றுவதுடன், டெவன் மற்றும் சென்கிளேயர் நீர் வீழ்ச்சியிலும் நீர் குறைவடைந்து குடி நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.