நீராடச் சென்ற நபரை காணவில்லை

குருநாகல், கொக்கரல்ல, இப்பாகமுவ பகுதியில் உள்ள குளமொன்றில நீராடச் சென்ற சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குளத்தில் நீராட சென்ற குழுவொன்றை சேர்ந்த ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமால் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவத்தகம, இங்குருவத்த பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த குழுவினர் யாத்திரை பயணம் மேற்கொண்ட நிலையில், குளத்தில் நீராட சென்ற போதே இந்த அனர்த்த் ஏற்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளின் உதவியுடன் காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]