“நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா

“நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளது. சட்டத்தரணி ஆர்.டி. கட்சிக்கும்  எழுதிய இந்நூல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.
மங்கள விளக்கேற்றத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில், இந்து மத தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, நுண்கலைப் பீட பன்னிசை கலாவித்தகர் ஹிமாலினி சுகந்தனின் இசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ் தேசிய ட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ. சுமந்திரன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டத்தரணி ஆர்.டி.ரட்ணசிங்கம், உட்பட வடமாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், வைத்திய நிபணர்கள், தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள், மகளீர் அமைப்பினர், சட்டத்தரணிகள் உட்பட பல துறையினரும் கலந்துகொண்டிருந்தனர்.

வடமாகாண முதலமைச்சர் இதுவரையில் ஆற்றிய உரைகளை தொகுத்து இந்நூல் வெளியிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]