நீதியமைச்சரின் பதவியை பறிக்குமாறு ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை

நீதியமைச்சரின் பதவியை பறியுங்கள் : ஜனாதிபதியுடம் ரணில் கோரிக்கை
விஜயதாச ராஜபக்சவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கும் கட்சியின் தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தில் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை வேண்டும் என்றே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தாமதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச விவகாரம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

விஜயதாச ராஜபக்ச தொடர்பில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]