நீதிமன்ற தீர்ப்பு குறித்து எமக்கு அச்சமில்லை- சஜித் பிரேமதசா தெரிவிப்பு

நீதிமன்ற தீர்ப்பு குறித்து எனக்கு எதிர்வு கூற முடியாது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதசா, நீதிமன்ற தீர்ப்பு குறித்து எமக்கு அச்சமில்லை. எவ்வகையான தீர்ப்பானாலும் அதனை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் மக்களுக்கு பணியாற்ற நாம் எனவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற கலைப்புக்கெதிரான வழக்கு தொடர்பில் ஆஜராகியிருந்த வேளை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிலர் தமக்கு எதிரான தீர்ப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தினால் குழறுபடிகளில் ஈடுபடுவதை காணமுடிகின்றது. இவ்வாறான கலகக்காரர்கள் ஐ.தே.க.வில் இல்லை.

மேலும் நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதை அவதானித்தேன். இப்பாதுகாப்பு இன்று மட்டுமல்ல 365 நாட்களும் நாடாளுமன்றம் நீதிமன்றம் ஏன் நாட்டு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஒன்று. வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்புக்காக நாட்டு மக்களுடன் நானும் காத்திருக்கின்றேன் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]