நீதிமன்ற தடையுத்தரவு வந்தால் தேர்தல் நிறுத்தப்படும் என மஹிந்த தேசப்பிரிய அதிரடி அறிவிப்பு?

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாராளுமன்றத்தை கலைப்பதாக விசேட வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தார்.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச மீது பாராளுமன்றில் கொண்டு வரப்படவிருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்க தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடைக்காத காரணத்தால் மைத்திரி தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு வருவதாக அறிவித்தார்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை அரசியல் யாப்புக்கு விரோதமானது என கூறி பலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பில் அதிரடி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு செல்லாது அதற்குரிய அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு எனவும், அப்படி தடையுத்தரவு கிடைக்கும் நிலையில் உடனடியாக தேர்தலுக்கான பணிகளை நிறுத்தி விடுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 1999ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி பிறந்தவர்களுக்கு இம்முறை வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]l.com