நேற்று மாலை யாழ்-நல்லூர் பகுதியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த அவரின் மெய்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த தாக்குதலில் நீதிபதி இளஞ்செழியனின் இரண்டு மெய்ப் பாதுகாவலர்கள் காயமடைந்துஇயாழ்ப்பாணம் போதனாமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலானது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகம் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]