நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலம் மனுக்கள் விசாரணை நிறைவு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான மனுவை விசாரணை செய்து இறுதி தீர்மானத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைப்பதாக கொழும்பு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மனு பிரதம நீதியரசர் பிரியசத் டெப், புவனேகா அலுவிஹார மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து இந்த சட்டமூலத்துக்கு எதிராக இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில விதிமுறைகள், நீதித்துறைக்கு இருக்கின்ற அதிகாரங்களை அரசாங்கம் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீது கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வந்த விசாரணை இன்று நிறைவடைந்தது.

இது குறித்த இறுதி இரகசிய தீர்மானத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைப்பதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]