முகப்பு Cinema நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழுக்கு வரும் டாப்சி

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழுக்கு வரும் டாப்சி

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிகை டாப்சி தமிழுக்கு எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

தமிழில் ஆடுகளம் படம் மூலம் பிரபலமான டாப்சி, அதன்பின்னர் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இருப்பினும் தமிழில் அவரால் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ஆர்.எக்ஸ்100 படத்தின் தமிழ் ரீமேக்கில், ஆதிக்கு ஜோடியாக டாப்சியை நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

மேலும் இந்த படத்திற்கு நடிகை டாப்சி அதிக சம்பளம் கேட்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்குப் படங்களிலும் நடித்துவந்த டாப்சி திடீரென இந்திக்குத் தாவினார். அமிதாப்பின் ‘பிங்க்’கால் ஹிந்தியில் அவருக்கு நன்றாகவே வரவேற்புகள் கிடைக்க பொலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

கைவசம் தற்போது நான்கு ஹிந்திப்படங்களை வைத்துள்ள டாப்சி படங்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் மும்முரமாக களமிறங்கினார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com