முகப்பு News Local News நீண்டகாலமாக வெள்ளவத்தை வாழ் மக்களுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த உமாசந்திர பிரகாஸ்

நீண்டகாலமாக வெள்ளவத்தை வாழ் மக்களுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த உமாசந்திர பிரகாஸ்

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பாமன்கடை மேற்கு வட்டாரத்தில் அமைந்துள்ள வெள்ளவத்தை – பெரேரா லேன் மிகவும் குறுகியதாகக் காணப்படுவதால், அவ்வீதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பெரேரா வீதியில் அதிகளவான குடியிருப்புகள், அதிலும் குறிப்பாக அதிகளவான தொடர்மாடி மனைகள் அமைந்திருப்பதால் அங்குள்ள மக்கள் பல செளகரியங்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர்.

ஆகவே பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரேரா லேனை அகலப்படுத்தித் தருமாறு கோரிய விண்ணப்பக் கடிதத்தை கடந்த 29.06.2018 திகதி மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் கையளித்தேன்.

அதன் பிரகாரம் மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் பிரிகேடியர் திலக் உபயவர்த்தன நேற்றைய தினம் (13.07.2018) வெள்ளவத்தை – வெள்ளவத்தை பெரேரா லேன் பிரதேசத்திற்கு விஜயம் செய்து, அங்குள்ள மக்களை சந்தித்து குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டார். இதன்போது அங்கு வாழும் பிரதேச மக்கள் குறித்த வீதியை அகலப்படுத்தி, புனரமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com