நீடிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்றம் கலைப்புக்கான இடைக்கால தடை உத்தரவு!

நாடாளுமன்றம் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட 7 நீதியரசர்கள் கொண்ட குழுவின் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று மூன்றாவது நாளாகவும் நடைப்பெற்றது.

இந்த மனுக்களை ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட 13 தரப்புக்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]