நாம் இது போன்ற கட்டுரைகள் இதற்கு முன்னர் ஒருசில முறை நமது தமிழ் போல்ட்ஸ்கை தளத்தில் படித்துள்ளோம். ஒரு படத்தை தேர்வு செய்வதன் மூலம், ஒருவரின் விருப்ப இலைகள் தேர்வு மூலம் ஒருவரது குணாதிசயங்கள், பண்புகள் எப்படி இருக்கும் என நாம் இங்கே படித்துள்ளோம். நூறு சதவிதம் இல்லை எனிலும், பெரும்பாலும் இவை ஒத்துப் போக வாய்ப்புகள் உள்ளன.

அந்த வகையில் ஒரு தங்கள் பேகை (Bag) மாட்டும் ஸ்டைலை வைத்து அவர்கள் மத்தியில் காணப்படும் சில பொதுவான குணாதிசயங்கள் மற்றும் பண்புகள் குறித்து தான் நாம் இன்று இங்கு இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்…

நீங்க பேக் மாட்டும்

முதுகில்!

நீங்கள் முதுகில் பேக் மாட்டும் பழக்கம் இருப்பவரா? நீங்கள் எப்போதும், எல்லா தருணத்திலும் பயணிக்க ரெடியாக இருக்கும் ஆள். நீங்கள் மற்றவர்கள் விருப்பதை கருத்தில் கொள்ளும் செய்யும் நபராக இருப்பீர்கள். மற்றவர்கள் உங்களை அதிகம் விரும்புவார்கள்.

கையில்!

பேகை கையில் எடுத்து செல்லும் பழக்கம் இருக்கும் நபரா நீங்க? நீங்கள் எந்த விஷயமாக இருந்தாலும், அதை உங்கள் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். இது தான் உங்கள் குறியாக இருக்கும். நீங்கள் எதையும் தெளிவாக கூறிவிட வேண்டும் என்ற விருப்பம் மற்றும் உங்கள் சொந்த கருத்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஒருவரை பற்றிய உண்மையை அவரிடம் துணிவாக கூறிவிடும் குணம் கொண்டவர். உங்கள் நம்பிக்கைத்தன்மை தான் உங்கள் பலம்.

நீங்க பேக் மாட்டும்

ஒருபக்கமாக…

பேகை ஒரு பக்கமாக தோளில் மாட்டும் பழக்கம் உள்ளவரா? அதிகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கும். படிப்பது மட்டுமின்றி அதை அதிக நேரம் கற்பனை செய்தும் பார்பார்கள். மிகவும் சாதுரியமானவர்கள். எப்போதும் கவனமுடன் இருப்பார்கள்.

சைடாக…

ஒரு தோளில் இருந்து மறுபுறம் சைடாக பேக் மாட்டும் நபரா நீங்க? உங்களிடம் இருந்த எந்த பொருளையும் திருட முடியாது. நீங்கள் அதிக பந்தா காட்டும் நபராக இருக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் தாராள மனதும் கொண்டவர். உங்கள் தாராள மனதை வைத்தே சிலர் உங்களை ஏமாற்றலாம். எனவே கவனமாக இருங்கள்.

முன்புறமாக!

பேகை முன்புறமாக மாட்டும் நபரா நீங்க? எதுவாக இருந்தாலும் சுட்டிக் காட்டுவார்கள். இவர்களது கற்பனை தெளிவாக இருக்கும். தங்களிடம் இருப்பவை இழந்துவிடக் கூடாது என்பதை தாண்டி, அவற்றை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டமிடலுடன் இருப்பார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]