நீங்க பிறந்த மாதம் எது? இந்த நோய் இருக்குமாம் உங்களுக்கு!

நாம் பிறந்த திகதிக்கு பலன்கள் இருப்பது போல பிறந்த மதத்திற்கும் பலன்கள் உள்ளன.

ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவர்கள் எந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆராய்ச்சியின் மூலம் கொலம்பியா பல்கலைக்கழத்தை சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட்டி, கண்டுபிடித்துள்ளார்.

ஜனவரி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஹைப்பர் டென்சன் என்னும் உயர் இரத்த அழுத்தத்தினால் அவஸ்தைப்படுவதாக கூறுகிறார்.

பிப்ரவரி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயான ஒழுங்கற்ற இதய துடிப்பால் கஷ்டப்பட்டுவார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மார்ச்

இந்த மாதத்தில் பிறந்தவர்களின் தமனிகளின் சுவர்களில் கொழுப்புக்கள் தேங்கி தடித்து இருப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

ஏப்ரல்

இந்த மாதத்தில் பிறந்தவர்களின், இதயத் தசைகளுக்கு சீராக ரத்த ஓட்டம் செல்வது குறைந்து, கடுமையான நெஞ்சு வலியை சந்திக்கக்கூடும் என்று கூறுகிறார்.

மே, ஜீன், ஜீலை மற்றும் ஓகஸ்ட்

இந்த நான்கு மாதங்களில் பிறந்தவர்கள் சற்று வலிமையானவர்களாக இருப்பார்கள். ஆனால் அவ்வப்போது சிறு சிறு உடல் கோளாறுகளை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறார்.

செம்டம்பர்

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆஸ்துமா என்னும் சுவாச நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

ஒக்டோபர்

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கவனக்குறைவு அதியியக்கக் கோளாறு என்னும் நடத்தைக் கோளாறுகள் மூலம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

நவம்பர்

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைரஸ் நோய்த் தொற்றுகள் மூலம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்.

டிசம்பர்

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]