நீங்க பிறந்த திகதி என்ன? வீட்டில் செல்வம் செழிக்க இதை மட்டும் செய்தாலே போதும்!

எண் ஜோதிடத்தின் படி உங்கள் பிறந்த எண்ணின் படி உங்கள் வாழ்க்கையை எப்படி செல்வ செழிப்பாக மாற்ற நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று பார்க்கலாம்.

எண் 1

உங்கள் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் அதாவது 1,10,19,28 ஆக இருந்தால் உங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களால் நீங்கள் எளிதில் பாதிக்கப்படுவீர்கள்.

உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு சாப்பிடுங்கள். கையில் மாணிக்கக்கல் போடுவது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும்.

எண் 2

2, 11, 20, 29 திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 2 ஆகும். நீங்கள் திங்கள் கிழமையில் விரதம் இருப்பது நல்லது.

அது இயலவில்லை எனில் திங்கள் கிழமையில் உப்பு சாப்பிட முயலுங்கள். கையில் முத்து அணிவது உங்கள் வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க உதவும்.

எண் 3

3, 12, 21, 30 போன்ற திகதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகை 3 ஆகும். வியாழக்கிழமையில் மஞ்சள் துணி அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் மேலும் வியாழக்கிழமையில் ப்ரஜாபதியை வழிபடுவது வெற்றியை உங்கள் தோள்கள் மீது கொண்டுவரும்.

எண் 4

4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகை 4 ஆகும். இவர்கள் வாழ்க்கையில் இருக்கும் தடங்கல்களை அகற்ற பிள்ளையாரை வழிபட வேண்டும்.

ஓம் ப்ரஹ்ம் புரிஷ் பிரம்மான் சாஹ் ரஹ்வ் நாமா என்ற மந்திரம் வெற்றியை வீடு தேடி வரவைக்கும்.

எண் 5

5, 14, 23 திகதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகைதான் 5 ஆகும். இவர்கள் மாட்டிற்கு புதன் கிழமைகளில் புல்லும், வெல்லமும் கொடுக்க வேண்டும். பிள்ளையாரை வழிபடுவது வெற்றியின் வாய்ப்பை அதிகரிக்கும்.

‘ஓம் பிராம்ம் ப்ரின்ம் பிரவும் ஸால் புதயே நாமா ‘ என்பது இவர்களின் வெற்றிக்கான மந்திரம் ஆகும்.

எண் 6

6, 15, 24, திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 6 ஆகும். வியாழ கிழமைகளில் லக்ஷ்மியை வழிபட்டு இனிப்பு சாப்பிடுவது இவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும்.

ஓம் டிராம்ம் டிரின்ம் ட்ரான்ம் சாஹ் ஷுக்ரேரே நமாஹ் என்பது இவர்களின் வெற்றிக்கான மந்திரம் ஆகும்.

எண் 7

7, 16 மற்றும் 25 திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 7 ஆகும். இவர்கள் கருப்பு நாயிற்கு உணவு படைப்பது இவர்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். நினைத்தது பலிக்க சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்ய வேண்டும்.

பிறந்த எண் 8

8, 17 மற்றும் 26 திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 8 ஆகும். இவர்கள் அரசமரத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

இவர்கள் சனிபகவானை ஊதுபத்திகள் கொண்டு வழிபடுவது இவர்களின் வாழ்க்கையில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அப்புறப்படுத்தும்.

எண் 9

9, 18 மற்றும் 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 9 ஆகும். இவர்கள் செவ்வாய் கிழமைகளில் அனுமனை வழிபடுவது இவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இவர்கள் தங்கம் அணிவது பொருளாதாரரீதியாக இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]