நீங்க இந்த ராசிக்காரரா?? அப்போ அதிக பயம், பதட்டம் இருக்குமாம்!!

உங்கள் ராசிப்படி நீங்கள் எதற்கெல்லாம் அதிகம் பயப்படுவீர்கள் என்பதை குறித்த விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்

மேஷம்
பொறுமை என்பதே உங்களுக்கு கிடையாது. போட்டி என்று வரும் போது அதில் வெற்றி பெறுவோமா என்ற பயம் உங்களிடத்தில் அதிகம் இருக்கும்

ரிஷபம்
அடைப்பட்ட கிளி போல் யாருடனும் வெளியே செல்லாமல், முடங்கியே இருப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்களைக் கண்டு நீங்கள் நிலை தடுமாறுவீர்கள்

மிதுனம்
முடிவு எடுக்கத் தெரியாமல், குழப்பத்திலே இருப்பீர்கள். மற்றவர்கள் நம்மை இப்படி நினைத்து விடுவார்களோ, அப்படி நினைத்து விடுவார்களோ என்ற பயம் இருக்கும்

கடகம்
நேரடியாக பேசாமல் சுற்றி வளைத்து பேசுவீர்கள். நடக்காத ஒன்றை நடந்து விடுமோ என்று நினைத்து நினைத்து பயப்படுவீர்கள்

சிம்மம்
நீங்களே உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களை விட்டு சென்று விடுவார்களோ என்ற பயம் இருக்கும்

கன்னி
யார் என்ன என்பது கூட தெரியாமல் உடனே நண்பர்களாகி விடுவீர்கள். எதையும் சீக்கரம் செய்து விட வேண்டும் என்ற பயம் உங்களுக்கு நிறையவே இருக்கும்

துலாம்
அதிக அன்போடு நீங்கள் இருப்பதால், மற்றவர்கள் அவர்களுடைய தேவைக்காக காரியங்களுக்காக உங்களை பயன்படுத்தி கொள்வார்கள். உங்களுடைய பயமே உங்கள் தனிமை தான்.

விருச்சிகம்
கொஞ்சம் பொறாமை குணம் அதிகமாக தான் உங்களிடம் உள்ளது யாராவது நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம் உங்களிடத்தில் எப்பவும் இருக்கும்

தனுசு
மனதில் எதையும் வைக்காமல் அதை அப்படியே கூறிவிடுவீர்கள். வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றி விடுவோமா என்ற பயம் உங்களுக்கு இருக்கும்.

மகரம்
எதிர்மறையாகவே சிந்திப்பீர்கள். வேலையில் நற்பெயர் எடுக்க வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். வேலை இழந்து விடுவோமோ என்ற பயம் உங்களுளுக்கு இருக்கும்.

கும்பம்
எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். இப்போது என்னுடன் இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இரு்பபார்களா என்ற பயம் நிறைந்து காணப்படுவீர்கள்.

மீனம்
எல்லா வேலைகளையும் பயத்தோடே செய்வீர்கள் உங்களுடைய சுதந்திரத்தில் யாராவது தலையிடுவார்களோ என்ற பயம் உங்களுக்கு உண்டு.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]