உலகத்தில் உள்ள பெரும்பான்மையானோருக்கு பிடித்த மலர் ரோஜா. அழகிற்கு ரோஜாவைதான் ஒப்பிடுவார்கள். அழகை அதிகரிக்கவும் ரோஜாவைத்தான் பயன்படுத்துவார்கள்.

35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. முதன் முதலில் சீனாவில்தான் ரோஜா மலர், தோட்டப் பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. ரோமானிய பேரரசில், மிகப் பெரிய ரோஜாத்தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது.

ரோஜா பூவானது, ரோசா மரபின் ‘ரோசசி’ குடும்பத்தை சேர்ந்த, ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகையை சேர்ந்தது. இதில் நூறு வகைகளும் பலவித வண்ணங்களும் உண்டு. பூர்விக வகைகள், பயிரிடு வகைகள் மற்றும் கலப்பின வகைகள் இவை அனைத்தும் இவற்றின் அழகு மற்றும் நறுமணத்திற்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன.

இந்தத்தாவரத்தின் உட்கொள்ளக்கூடிய சதைப்பிடிப்பான பழம் “ரோஜாவின் இடுப்பு” என்று அழைக்கப்படுகிறது.

மிகச்சிறிய ரோஜா மலரிலிருந்து , 20 மீட்டர் உயரம் வளரக்கூடிய     பலவகைப்பட்ட ரோஜா மலர்கள் காணப்படுகின்றன . உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த தாவர வகைகளை எளிதாக கலப்பியலுக்கு உட்படுத்த முடிவதால், பல விதமான தோட்ட ரோஜாக்களைக் காண முடிகிறது.

ரோஜா மலர்களிலிருந்து நீராவி முறையில் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், ”ரோஜாவின் இத்தர்” எனப்படும் .

பல நூற்றாண்டுகளாக நறுமணப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரோஜா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா நீர்- ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளின் சமையல் முறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

ரோஜா இதழ்களின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா பானம் பிரெஞ்சு மக்களிடையே பிரசித்தம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ”ரோஜா ஸ்கோன்” எனப்படும் கேக் தயாரிக்க இந்த பிரென்ச் ரோஜா பானம் பயன்படுத்தப்படுகிறது.

ரோஜாவின் இடுப்பு அரிதாக பழக்கூழ், பழக்கூழ்பாகு, பழப்பாகாக மாற்றப்படுகிறது. ரோஜாவில் அதிக அளவில் அடங்கியிருக்கும் விட்டமின் C க்காக தேநீர் தயாரிக்க காய்ச்சப்படுகிறது.

சருமப் பொருட்கள் மற்றும் சில அலங்காரப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ரோஜா இடுப்பு , விதை எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

ரோஜாப்பூவின் அழகும், மணமும் மக்களை அதுவும் பெண்களை பெரிதும் கவரும்.பொதுவாக ரோஜாவை அலங்காரப் பொருளாகவும் அழகு சாதனப் பொருளாகவும் மட்டுமே நாம் அறிவோம்.

ஆனால், நமக்கு தெரியாத ரோஜாவின் பயன்கள் இருக்கிறது
மருத்துவ உலகில் ………

ரோஜாவின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும்; உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

ரோஜா பூக்களில் பினைல் எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரை போன்ற செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் அடங்கியுள்ளன.

பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள் நீங்கும். இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.

ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

மலம் இறுகிய குழந்தைகட்கு இது  மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது. ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை (தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ளவேண்டும்.

குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.

ரோஜா இதழ்களை தொடர்ந்து உட்கொண்டால்   ரத்த விருத்தி உண்டாகும்.

ரோஜாப்பூ இதழ்களை  பயத்தம்பயிர் மற்றும் பூலாங் கிழங்குடன் விழுதாக அரைத்து  தினமும் உடலில்  தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கின்றனர் .கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து குணமாகுவதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.

காதலுக்கு மட்டுமல்ல காலத்துக்கும் பயன்தரக்கூடிய ரோஜா மலர்கள், நம் ஆரோக்கியத்திற்கு நல் அரண்.