நிவ்யோர்க்கில் இரு குழந்தைகள் பரிதாப பலி!

நிவ்யோர்க்கின், புரூக்லினில் காரொன்று மோதியதில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.Brooklyn Street Accident

வேகமாக பயணித்த காரொன்று மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

தமது தாயாரால் ‘ட்ரொலியில்’ வைத்து அழைத்துச் செல்லப்படும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. நான்கு மற்றும் இரு வயதான குழந்தைகளே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

டொரோதி பிரன் என்ற 44 வயது பெண்ணே காரை செலுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் அவர் விபச்சார விடுதியொன்றை நடத்தி வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளைகளின் தாயாரும் விபத்தில் காயமடைந்துள்ளனர். இது தவிர மேலுமொருவரும் விபத்தில் காயமடைந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]