முகப்பு News India நிவாரணப்பொருட்களை சுமந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர்

நிவாரணப்பொருட்களை சுமந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர்

நிவாரணப்பொருட்களை 70 கி.மீட்டர் தூரம் சுமந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர், அதனை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர்.

கோவையில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களையே பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் தலைச்சுமையாக 70 கி.மீட்டர் தூக்கி சென்று, அங்கு 7 நாட்களுக்கு மேல் பசி, பட்டினியால் தவித்த குழந்தைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

தலைசுமையாக 70 கி.மீட்டர் தூரம் நடந்தே வந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிய பேரிடர் மீட்பு குழு மற்றும் பொதுமக்களுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நெல்லியாம்பதி மலைப்பகுதியில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த பேய் மழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் கடந்த 7 நாட்களாக இல்லாமல் தோட்டத்தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.

நிவாரணப்பொருட்களை சமவெள்ளப்பகுதிக்கு கொண்டு செல்லவே கடினமாக இருக்கும் சூழலில் மழை பகுதிக்கு பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலையில் கோவையில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் தலைச்சுமையாக 70 கி.மீட்டர் தூக்கி சென்று நெல்லியாம்பதிக்கு கொண்டு சென்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com