நில அளவையாளர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்!

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச நில அளவையாளர் சங்கம் இன்று (13) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

அடையாள பணிப்புறக்கணிப்பிற்கு அரசாங்கம் சரியான பதிலை வழங்காததன் காரணமாக தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவுடன் தமது பிரச்சினைகள் சம்பந்தமாக பேசிய போதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவுடன் அத தெரண தொடர்பு கொண்டு வினவிய போது, அரச நில அளவையாளர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து நேற்று விரிவாக பேசியதாக கூறினார்.

இதன்போது அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு பெற்றுக் கொள்வதற்கு உடன்பட்டதாக அமைச்சர் கூறினார்.

இவ்வாறான நிலையில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது என்று அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]