முகப்பு News Local News நிலையான வேதன அதிகரிப்பு குறித்து அவதானம்

நிலையான வேதன அதிகரிப்பு குறித்து அவதானம்

இந்தமுறை கூட்டு உடன்படிக்கையின்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேதனமானது, நாளாந்தம் நிச்சயமாக கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கூட்டு உடன்படிக்கையின்படி தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வேதனமானது, தோட்ட நிர்வாகங்களால் உரிய வகையில் வழங்கப்படவில்லை.

நிச்சயிக்கப்பட்ட நாளாந்த சம்பளத்துக்கு குறைவான தொகையே வழங்கப்பட்டு வந்துள்ளன.

இந்த நிலையில், அந்த நிலைமையை மாற்றி, இந்த முறை தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட தொகை கிடைக்கப்பெறுவது உறுதி செய்யப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com