நிலவில் உருளைக்கிழங்கு கிடைக்குமா ?

எதிர்வரும் நிலாப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திரனில்உருளைக்கிழங்குகளை வளர்க்க சீன அறிவியலாளர்கள் முயற்சி செய்ய உள்ளனர்.

நிலவில்
சாங்கிங் பல்கலைகழகத்தின் பேராசிரியரான ஜி ஜெங்ஜின்,” அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள சாங்ஜி-4 திட்டத்தின் ஒரு பகுதியாக, இங்கு நிலவுவது போன்ற சுற்றுச்சூழல் கொண்ட ஒரு சிறிய பெட்டகத்திற்குள் உருளைக்கிழங்குகள் அடைக்கப்படும்.

பூமியின் ஒரே இயற்கை செயற்கைக்கோளின் (நிலவு) மேற்பரப்பில் உள்ள சிறிய சிலிண்டருக்குள் சில பட்டுப்பூச்சி லார்வாக்களும் அடைக்கப்படும்.”என சாங்கிங் மார்னிங் போஸ்ட் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சந்திரனின் மேற்பரப்பில் பூச்சிகள் அல்லது கிழங்குகள் தாக்குப்பிடிக்குமா என்பதை கண்டறிவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

இந்த ஆராய்ச்சியில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு எதிர்காலத்தில் சந்திரனில் மனித வசிப்பிடங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைக்கலாம்.” என சீன சர்வதேச வானொலி தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]