நிலவில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்

வழக்கத்தை விட 30 வீதம் அதிக வெளிச்சமான சந்திரனை இன்று காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பீடத்தின் வானியல் மற்றும் விண்வெளி அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன இதனைக் கூறியுள்ளார்.

“முழுமதி நாளான இன்று, சுப்பர் நிலவு என அழைக்கப்படும் அதிக பிரகாசமான- வழக்கத்தை விட பெரியதான சந்திரனைக் காண முடியும்” எ்ன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று சந்திரன் வழக்கத்தை விட 14 வீதம் பெரியதாகவும், 30 வீதம் அதிக பிரகாசமானதாகவும் தென்படும். இதனால், உயரமான அலைகள் எழக்கூடும்.

அடிவானத்தில் இருக்கும் போது இன்று மாலை உதயமாகும் போது, அல்லது நாளை அதிகாலை மறையும் போது, அதிக பிரகாசமான இந்த சுப்பர் நிலவை இலங்கையில் இருந்து பார்ப்பது சிறந்தது.

சில வதந்திகள் பரவுவது போல, இந்த சுப்பர் நிலவினால், எந்த இயற்கை அனர்த்தங்களும் ஏற்பட வாய்ப்பில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]