நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க பிவித்துறு ஹெல உறுமய எதிர்ப்பு

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கு தமது கட்சி எதிர்ப்பு வெளியிடுவதாக பிவித்துறு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அக்கட்சியின் பிரசார செயலாளர் துஷார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வது தொடர்பில் உறுதியான கருத்துக்களை ஒன்றிணைந்த எதிரணி வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கு முயற்சித்தால் அதற்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒன்றிணைந்த எதிரணியின் குழுக்கூட்டங்களில் தமது கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]