நிறைவேற்று அதிகார முறையில் மாற்றங்கள் தற்போதைய சூழலில் அவசியமில்லை கருத்துக்கணிப்பில் பொதுமக்கள்

நிறைவேற்று அதிகார முறையில் மாற்றங்கள் தற்போதைய சூழலில் அவசியமில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கலாநிதி பாக்கியசோதி சரவமுத்து பணிப்பாளராக உள்ள அரசாபற்ற நிறுவனமான மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் நாடு பூராகவும் மேற்கொண்ட பொது மக்கள் கருத்துகணிப்பில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அவசியமா? அவசியமற்றதா? என்ற கேள்வி மக்களிடம் தொடுக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள மக்களில் பெரும்பான்மையானோர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிர்ப்பையே தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று ஜனாதிபதி முறையை பயன்படுத்தி நாட்டில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளையும், ஜனநாயக ஒடுக்குமுறையையும் மேற்கொண்டு வந்தார் என்ற காரணத்தை காட்டி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று முறைமை ஒழிக்கப்படும் என்று மைத்திரி ரணில் தலைமையிலான அணியினர் மக்களுக்கு வாக்குறுதியளித்தனர்.

ஆனால், பின்னர் நிறைவேற்று முறைமை ஒழிப்பதற்கு எதிராக நாட்டில் ஒரு பகுதியினர் போர்க்கொடி உயர்த்தியிருந்தனர். அத்துடன், தேசிய அரசின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நிறைவேற்று முறைமையை ஒழிப்பதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருந்தனர்.

இவ்வாறான சூழலிலேயே மக்களின் மனங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவது தொடர்பில் இப்போதைக்கு முன்னுரிமைக்கு வழங்கத் தேவையில்லை என்று பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துக்கணிப்பில் 66.2 வீதமான மக்கள் அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவது தொடர்பில் ஆராய்வதை விடுத்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நிறைவேற்று அதிகார

வாழ்க்கைச் செலவுகளை குறைப்பது, அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது, பொருளாதார வளர்ச்சி, வேலையின்மையை குறைக்க, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், ஊழல்களை ஒழித்தல் போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது மக்களின் கருத்தாக்கவுள்ளது.

வாழ்க்கைச் செலவை உடனடியாக குறைக்கவேண்டும் என்பது ஆய்வில் கலந்துகொண்ட மக்களின் கருத்தாக காணப்படுகிறது. திருத்தங்களுடன் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமெனன ஆய்வில் கலந்துகொண்ட 38.9 வீதமானவர்கள் தெரிவித்துள்ள அதேவேளை, 23.5 வீதமானவர்கள் புதிய அரசியலமைப்புக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். 16.5 வீதமானவர்கள் புதிய அரசாங்கம் ஒன்று அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளதாக மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]