நிறைவேற்று அதிகாரத்தின் துஷ்பிரயோகமே நாட்டின் பாரதூரமான கடன் சுமைக்கு காரணம்

புதிய அரசமைப்பில் நாடாளுமன்ற ஆட்சிமுறையே நடைமுறைபடுத்தப்படும். பொது மக்களின் பணத்தை நிர்வகிக்கும் உரிமம் நாடாளுமன்றத்திற்கே உரித்துடையது. ஆனால், கடந்த காலத்தில் நிறைவேற்று அதிகார முறைமையின் கீழ் நிதி முகாமைத்துவம் செய்யப்பட்டமையாலே இந்த நாடு பாரதூரமான கடன் சுமைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பசுபிக் பிராந்தியத்தின் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

எமது நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றமும் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. புதிய அரசமைப்பின் ஊடாக நாடாளுமன்றத்தை முற்றாக மறுசீரமைப்புச் செய்வது எம்முடைய நோக்கமாகும். அதற்காக எங்களுடைய செயற்பாடுகள் தற்போதைய சூழலில் இடம்பெற்றுதான் வருகிறது.

அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஆட்சிப் பொறிமுறையில் இடம்பெற வேண்டிய மாற்றங்களின் பிரதிபலனை எதிர்காலத்தில் எம்மால் அனுமானித்தக்கொள்ள முடியும். முன்னாள் ஆட்சியில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் நிறைவேற்று முறைமையின் கீழ் பயன்படுத்தப்பட்டமையால் பாரிய அதிகார துஷ்பிரயோகங்கள் இந்த நாட்டில் இடம்பெற்றன.

நிறைவேற்று அதிகாரத்தின்

அரசுடன் இணங்கி செயற்படாத எம்.பிக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. அத்துடன், அரசுக்கு சார்பாக நாடாளுமன்றில் பின்வரிசையில் இருந்த எம்.பிக்களுக்கு உள்ள அதிகாரத்தை விடவும் எதிர்க்கட்சிக்கு அதிகாரம் குறைவாகவே காணப்பட்டது. ஒரு ஜனநாயக நாடாளுமன்றில் எதிர்க்கட்சியை விடவும் பின்வரிசை உறுப்பினர்களுக்கு நிறைவேற்று முறைமையால் அதிகாரம் கிடைத்திருந்தது.

பொது மக்களின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் செயற்பாடு இருக்கவில்லை. நாடாளுமன்றத்திறத்திற்கு கிடைத்த மக்களின் அதிகாரத்தை முறையாக பயன்படுத்தப்படாமையால் நிதி முகாமைத்துவமொன்று இருந்திருக்கவில்லை. இதன் காரணமாகவே நாட்டின் கடன் சுமை பாரதூரமானதாக மாறியுள்ளது.
எனவே, நாடாளுமன்ற ஆட்சியை நடைமுறைப்படுத்துவம் வகையில் புதிய அரசமைப்பில் மறுசீரமைப்புகள் இடம்பெறும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]