நிறுவனங்களை பதிவு செய்யும் சேவை இணையமயம்

நிறுவனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல சேவைகளை இணையத் தளத்தின் ஊடாக மேற்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கம்பனிகளைக் கூட்டுத்தாபனமாக்குதல் மற்றும் நிறுவனங்களின் இலச்சினையை அங்கீகரித்தலுக்கான கடித ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பான கொடுப்பனவுகளை இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

eroc.drc.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் இது தொடர்பான சேவைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]