நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பெண்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்- பெண்கள் அமைப்பு தகவல்

நாட்டில் நிலையான சமாதானத்தினை சமாதானத்தினை ஏற்படுத் வேண்டுமாயின், பெண்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். பெண்களின் பிரச்சினைள் தீர்க்கப்படாமல் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்த முடியாதென போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள கிறீன் கிராஸ் விருந்தினர் விடுதியில் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநதித்துவம் ஏன் அதிகரிக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில் பெண்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று (31) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி விசாகா தாம்தாச கலந்துகொண்டு, பெண்களின் பிரதிநித்துவம் ஏன் அதிகரிக்கப்பட வேண்டும். தேர்தலில் பெண்களின் பங்களிப்புக்கள் தொடர்பில் பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இந்த கலந்துரையாடலில், மிக முக்கியமாக வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், கேசவன் சயந்தன், அஸ்மின் அயூப் உட்பட க.சிவயோகன் ஆகியோர் கலந்துகொண்டு, பெண்களின் பிரதிதிநித்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் பெண்களின் பங்களிப்புக்கள் தொடர்பான தமது கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர்.

இதன்போது, நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது பெண்களின் பங்களிப்பு 23 வீதம் வழங்கப்பட்டமை எதிர்வரும் காலங்களில் 50 வீதமாக வழங்கப்பட வேண்டுமென்றும், ஆண்களினால் 100 ற்கு 100 வீதம் அரசியலில் பங்களிப்புச் செய்ய முடியுமெனின் ஏன் பெண்களினால், 100 ற்கு 100 வீதம் பங்களிப்புச் செய்ய முடியாது.
திருமணமானவராயின் கணவனின் அனுமதியுடனும், குடும்பத்தாரின் ஒத்துழைப்புடனும், அரசியலில் பிரவேசித்து பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசக்கூடிய அந்தஸ்தினைப் பெற வேண்டும். பெண்கள் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார சமத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் கட்சி என்ற ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

ஸ்மாட் 75 என்ற அமைப்பின் ஊடாக வடமாகாண பெண்கள் தமது பிரச்சினைகளையும், அரசியல் பங்களிப்பினையும் முன்னெடுக்க உருவாகிய அமைப்பின் ஊடாக இன்னும் பெண்கள் மத்தியில் அரசியல் ஆர்வத்தினையும், பெண்களின் பாதுகாப்பு மற்றும், பிரச்சினைகளை அறிந்து ஆராய்ந்து, தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், அரசியலில் பெண்களின் பங்களிப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

அதற்குரிய வாய்ப்புக்களை பெண்களுக்கு வழங்க ஆண்கள் முன்வர வேண்டுமென்பதுடன், கட்சிகள் முன்வர வேண்டுமென்றும் ஸ்மார்ட் 75 அமைப்பில் அங்கம் வகிக்கும் பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நிரந்தர

எதிர்காலத்தில் பெண்கள் கட்சிகள் உருவாக்கப்பட்டு, பெண்களின் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்புக்களை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்குரியவாறு, செயலாற்ற பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்பதுடன், எதிர்காலத்தில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டுமென்றும் தீர்மானங்கள் எடுத்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில், வட மாகாணத்தினைச் சேர்ந்த, தமிழ் சிங்கள முஸ்லீம் பெண்கள், மற்றும் உள்ளுராட்சி சபைகளில் அங்கம் வகிக்கும் பெண் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]