நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலகிய மெத்தீவ்ஸ் – அணியில் இணைந்த சதீர சமரவிக்ரம

இலங்கை- நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது, ஏற்பட்ட உடல் ரீதியான உபாதை காரணமாக அஞ்சலோ மெத்தீவ்ஸ் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார்.

உபாதை காரணமாக மெத்தியூஸ் 4 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த உபாதை காரணமாக, எதிர்வரும் 24 ஆம் திகதி அவுஸ்திரேய அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டி உள்ளிட்ட இரு டெஸ்ட் போட்டிகளில் அஞ்ஜலோ மெத்தியூசுக்கு விளையாட முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்து அணிக்கு எதிரான 20க்கு20 மற்றும் ஒருநாள் கிரிக்கட் தொடருக்கான இலங்கை குழாமில் அஞ்சலோ மெத்தீவ்ஸிற்கு பதிலாக சதீர சமரவிக்ரம இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]