நியூஸிலாந்தின் வடக்கு தீவில் குக் சூறாவளி

நியூஸிலாந்தின் வடக்கு தீவில் குக் சூறாவளி காரணமாக கடும் மழை பெய்துவரும் நிலையில், தலைமுறைகளில் மோசமான புயல் என்றழைக்கப்படும் இது நாட்டின் வட கிழக்கு பகுதியை தாக்கியுள்ளது.

கோரமண்டல் தீபகற்பம் மற்றும் பே ஆஃப் பிலென்டியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளால் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

சில கடற்கரை பகுதிகளில் சுமார் 16 அடி தூரத்திற்கு எழும்பும் அலைகள் காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சூறாவளி தீவிரம் அடைந்துவரும் நிலையில் மணிக்கு 150 கி மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


ஆனால், நியூஸிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்த் மோசமான சேதங்களிலிருந்து தப்பித்துள்ளது.
குக் சூறாவளி பே ஆஃப் பிலென்டியில் உள்ளூர் நேரப்படி சுமார் 18.30 மணிக்கு கரையை கடந்துள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை தீவின் தெற்கு பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்தின் வடக்கு தீவில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]