நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காநியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக சமநிலையில் முடிந்தமையால் 3 போட்டிகளை கொண்ட தொடரை 10 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி கைப்பற்றியது.

தென்ஆப்பிரிக்காநியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 314 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 3ஆவது நாள் ஆட்டம் முடிவில் 104 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்களை எடுத்து இருந்தது.

தலைவர் வில்லியம்சன் 148 ஓட்டங்களுடனும், சான்ட்னெர் 13 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்றைய 4ஆவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய வில்லியம்சன் 176 ஓட்டங்களிலும், சான்ட்னெர் 41ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 162.1 ஓவர்களில் 489 ஓட்டங்களைக் குவித்தது.

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் மோர்னே மோர்கல், ரபடா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 175 ஓட்டங்கள் பின்னிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை எடுத்திருந்த வேளையில் மழை குறிக்கிட்டதால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் காரணமாக தொடரில் 10 என தென்னாபிரிக்கா முன்னிலைப் பெற்று தொடரை கைப்பற்றியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]