நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மயிரிழையில் தப்பித்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள்- வைரல் வீடியோ உள்ளே

நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருந்து வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் நூலிழையில் தப்பி இருக்கிறார்கள். நியூசிலாந்திற்கு கிரிக்கெட் விளையாட சென்று இருக்கும் இவர்கள் இந்த துப்பாக்கி சூட்டில் சிக்காமல் தப்பித்துள்ளனர்.

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூசிலாந்தின் மையப்பகுதியான சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மசூதிக்குள் 300க்கும் மேற்பட்ட நபர்கள் தொழுகை செய்து கொண்டு இருக்கும் போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபரை இன்னும் பிடிக்க முடியவில்லை. எத்தனை பலி இதில் 6 பேர் பலியாகி உள்ளனர். எத்தனை பேர் காயம் அடைந்தனர் என்றும் இன்னும் விவரம் வெளியாகவில்லை. இன்னும் பல பேர் பலியாகி இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வருகிறது.

இந்த துப்பாக்கி சூட்டில் இருந்து வங்கதேச கிரிக்கெட் அணி நூலிழையில் தப்பி இருக்கிறது. தற்போது வங்கதேச கிரிக்கெட் அணி, கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்று இருக்கிறது. அந்த அணி இந்த பகுதியில்தான் தங்கி இருக்கிறது.

நிறைய இடங்கள் இந்த பகுதியில் நிறைய மசூதிகள் அடுத்தடுத்து இருக்கிறது. அதில் ஒரு மசூதியில் வங்கதேச அணி வீரர்கள் தொழுகை நடத்திக் கொண்டு இருக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அருகில் இருந்த மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நியூசிலாந்து நியூசிலாந்து

இந்த நிலையில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் அங்கிருந்து வங்கதேச அணி வீரர்கள் உடனடியாக வெளியேறினார்கள். பாதுகாவலர்கள் உதவியுடன் அவர்களை உடனடியாக வெளியேறினார்கள். இவர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறும் வீடியோ வெளியாகி உள்ளது. இவர்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]